பசில் திடீரென வைத்தியசாலையில் அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவர் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது இதுவரை தெரியவில்லை.
ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்னரும் அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.