டேன் பிரியசாத்துக்கு எதிர்வரும் 1ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியல்

டேன் பிரியசாத்துக்கு எதிர்வரும் 1ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மே 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட புதிய சிங்களே தேசிய அமைப்பின் தலைவர் டேன் பிரியசாத் எதிர்வரும் 1ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மே 9 தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதிய சிங்களே தேசிய அமைப்பின் தலைவர் டேன் பிரியசாத் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.