ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்த தினம் இன்று.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 73 ஆவது பிறந்த தினம் இன்றாகும். மாத்தறை மாவட்டத்தின் பலாத்துவையில் 1949 ஜூன் 20 ஆம் திகதி பிறந்தவர் நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ.
டி.ஏ. ராஜபக்ஷ – டீ.ஏ. ராஜபக்ஷ தம்பதிகளின் 9 பிள்ளைகளில் 5 ஆவது பிள்ளையாக பிறந்தவர் கோட்டாபய.
1971 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்த அவர், 2005 ஆம் ஆண்டு, பாதுகாப்புச் செயலாளராக பதவியேற்றார். 2019 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, 2019 நவம்பர் 18 ஆம் திகதி ஜனாதிபதியாக அவர் பதவியேற்றார்.