பாராளுமன்றம் நாளை காலை சபாநாயகர் தலைமையில் கூடுகிறது

பாராளுமன்றம் நாளை காலை சபாநாயகர் தலைமையில் கூடுகிறது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடுகிறது. நிலையியல் கட்டளைகளின்படி வழமைபோன்று, வாய்மூல வினாக்களுக்கு பதில்கள் வழங்கப்பட்டதன் பின்பு, முற்பகல் 11.30 வரை உள்ள நேரத்தில், குற்றவியல் நடவடிக்கை முறை சட்டத்திருத்தம் சட்டமூலம் மற்றும் சிவில் நடவடிக்கை சட்டக்கோவை திருத்தச்சட்டமூலம் ஆகியன விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்படுகின்றன.

அதன்பின்னர், முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கைத்தொழிற் பிணக்குகள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் விவாதத்தின்பின் நிறைவேற்றப்பட உள்ளது.
நாளை கூடும் பாராளுமன்றம் எதிர்வரும் 24ஆம் தேதி வரை நடைபெறும்.

இதேவேளை, கோப் குழுவின் முதலாவது அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக தெரியவருகிறது. நாளை மறுதினம், நாட்டில் தற்போது நிலவும் சுகாதார பிரச்சினைகள் குறித்து சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்த பாராளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்திருக்கிறது.