வரிசையில் ஒன்றரை நாள் காத்திருந்த ஒருவர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பண்டாரகம பிரதேசத்தில் எரிபொருள் வரிசையில் ஒன்றரை நாள் காத்திருந்த நபரொருவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் எரிபொருள் வரிசையில் இருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்து இவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது அங்கு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையென பொலிஸார் குறிப்பிட்டனர்.