தம்மிக பெரேரா எம் பியானார்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுஜன பெரமுன கட்சியின்,தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக பெரேரா சற்று நேரத்துக்கு முன் நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பசில் ராஜபக்ஷ இராஜினாமா செய்த இடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார் என்ற விடயம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதை அடுத்து , அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்களை விசாரணைக்கு எடுக்காமலேயே உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்தே தம்மிக பெரேரா இன்று சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
தம்மிக பெரேரா இலங்கையின் முன்னணி வர்த்தகர் என்பது குறிப்பிடத்தக்கது.