(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பல சொகுசு கார்கள் ஒருகொடவத்தை சுங்கப் பிரிவில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Mercedes Benz Maybach, Audi A1, Fiat car ஆகிய 5 கார்களே சுங்க பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த வாகனங்கள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பிரித்தானியாவில் இருந்து மோட்டார் உதிரிபாகங்களாக இலங்கைக்கு இந்த வாகனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.