(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
நாட்டில் கடவுச்சீட்டு பெற்றுக்கொண்ட 80 வீதமானவர்கள் இன்னும் வெளிநாடு செல்லவில்லை என குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் சுமார் நான்கு இலட்சம் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் 70,000 பேர் மட்டுமே வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை 2400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒருநாள் சேவையில் 1000 கடவுச்சீட்டுக்களும், சாதாரண சேவையில் 800 கடவுச்சீட்டுக்களும், ஏனைய பிராந்திய கிளைகளின் ஊடாக மேலும் 600 கடவுச்சீட்டுக்களும் வழங்கப்படுகின்றன.
நாட்டில் 35 முதல் 45 லட்சம் வரையிலானவர்கள் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.