இன்றிலிருந்து ஊழியர் சேமலாப நிதிக் கணக்கிலிருந்து நூற்றுக்கு 30 வீதக் கொடுப்பனவு

ஊழியர் சேமலாப நிதிக் கணக்கிலிருந்து நூற்றுக்கு 30 வீதக் கொடுப்பனவினை வழங்கும் நிகழ்ச்சி நிரல் இன்று (27) அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஊழியர்களின் நன்மை கருதி காணி மற்றும் வீடு கொள்வனவுக்கு, வீட்டுத் தளபாடப் பொருட்கள் கொள்வனவுக்கு, அடகு வைத்திருக்கும் பத்திரங்களை மீட்க, கடன் தேவைகளுக்கென இச்சலுகை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர புற்று நோய், சீசேரியன் சத்திர சிகிச்சை அல்லது நோயினால் 14 நாட்களுக்கு குறையாமல் வைத்தியசாலையில் சிகிச்சை பெறல்,இதய சத்திர சிகிச்சை, பைபாஸ் சத்திர சிகிச்சை போன்றவற்றிக்கும் நூற்றுக்கு 30 வீதக் கொடுப்பனவு வழங்கப்படும்.

இச்சலுகையானது ஊழியரின் கணக்கில் 3 இலட்சத்திற்கு குறையாமல் பணம் இருந்தால் மட்டுமே செல்லுபடியாகும்.