அமெரிக்க அரசின் அதிகாரத்தை மீறி செயல்பட்டதாக அதிபர் ஒபாமா மீது வழக்குத் தொடர பிரதிநிதிகள் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு சுகாதார பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்ட போது, அதிபர் ஒபாமா தனது அதிகாரத்தை மீறி செயல்பட்டதாக குடியரசுக் கட்சி புகார் எழுப்பியது.
இது குறித்து பிரதிநிதிகள் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் 201 உறுப்பினர்கள் ஒபாமாவுக்கு எதிராக வாக்களித்ததால் மசோதா வெற்றி பெற்றது.
வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால், குடியரசுக் கட்சியினர் அதிபர் ஒபாமாவுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஜனநாயகக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது