ஜனாதிபதி பதவி விலகுவதாக அறிவிப்பு

ஜனாதிபதி பதவி விலகுவதாக அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 13 ஆம் திகதி தான் பதவி விலகுவதாக ஜனாதிபதி தன்னிடம் அறிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

விசேட அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இன்றைய தினம் கட்சித் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை தான் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தேன். இந்த தீர்மானங்களை செயற்படுத்த அவர் இணக்கம் தெரிவித்தார். இதற்கமைய எதிர்வரும் 13 ஆம் திகதி புதன் கிழமை தான் பதவி விலகுவதாக ஜனாதிபதி தனக்கு அறிவித்தார். அமைதியான முறையில் ஆட்சியை கையளிப்பதற்கான இணக்கத்தை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று இரவு பிரதமரின் தனிப்பட்ட இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. சில தரப்பினர் வன்முறைகளை கட்டவிழ்த்துள்ளனர். இதன் காரணமாக தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாமல் அமைதியான முறையில் தத்தமது வீடுகளுக்கு செல்லுமாறு பொறுப்புணர்வுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்கும் வரை நாட்டின் நாளாந்த செயற்பாடுகளை வழமைப் போன்று முன்னெடுத்துச் செல்லுமாறு அனைத்து அரச அதிகாரிகளிடமும் மற்றும் பொது மக்களிடமும் மேலும் கேட்டுக் கொள்கிறேன்.