ஜனாதிபதி மாளிகைக்குள் கூரிய ஆயுதத்துடன் நுழைய முற்பட்ட போலீஸ் அதிகாரி கைது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஹைலெவல் வீதியால் வந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக மஹரகம நகருக்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர், இன்று (11) அதிகாலை கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் கூரிய ஆயுதத்துடன் நுழைய முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் போக்குவரத்து பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொழில்நுட்ப பொலிஸ் சார்ஜன்ட் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்