ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு – பதிலளிப்பு அடிப்படையில் கூட்டமைப்பு ஆதரவு

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு – பதிலளிப்பு அடிப்படையில் கூட்டமைப்பு ஆதரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடவுள்ளவர்களிடம் முன்வைக்கப்படும் கோரிக்கைகள், ஏற்றுக்கொள்ளப்படுவதன் அடிப்படையியே ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றைய தினமும் எதிர்க்கட்சிகளிடையே முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் பங்களாளிக் கட்சியான டெலோவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பங்கேற்றார்.

குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இந்த விடயம் தொடர்பில், எதிர்வரும் 14 ஆம் திகதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து மேற்கொள்ளும் தீர்மானம், சம்பந்தப்பட்ட போட்டியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு, அதன்மூலம் ஏற்படும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.