பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க கடமை ஏற்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக கடமையை ஏற்க உள்ளார். ஜனாதிபதி தற்போது வெளிநாட்டுக்கு சென்றிருப்பதன் காரணமாக, ஜனாதிபதியின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே இவ்வாறு ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 37 (1) இற்கு அமைவாக இவ்வாறு கோட்டாபய ராஜபக்வினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது