(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
பாராளுமன்றத்தைப் பாதுகாக்க வேண்டுமெனில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக பதவி விலகவேண்டும் கட்சித் தலைவர்கள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இன்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடும் காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ள கட்சித் தலைவர்கள், எனவே ஆர்ப்பாட்டக்கார்ர்கள் பாராளுமன்றத்தையும் கைப்பற்றும் முன்னர், பதில் ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளார்.