ஜனாதிபதி மாளிகையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகைக்குள் சிறிய கஞ்சா பொதியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை அங்கு பணியாற்றிய காவல்துறைவிசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இன்று காலை பணியில் இருந்தபோது ஜனாதிபதி மாளிகையின் நீச்சல் தடாகத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த நபரை சோதனையிட்டுள்ளனர்.
சந்தேகநபரிடம் இருந்து கஞ்சா அடங்கிய சிறிய பொதி கண்டுபிடிக்கப்பட்டதுடன், குறித்த நபர் மேலதிக விசாரணைகளுக்காக கோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மீரிகம பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் ஒருவரென காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.