கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சபாநாயகர்

கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சபாநாயகர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கூட்டம் குறித்து அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு உறுப்பினர்களும் இதில் பங்கேற்க உள்ளனர்.

பிரதமர் பதவி தொடர்பில் கட்சித் தலைவர்கள் செய்துகொண்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் பிரதான நோக்கமாக இருந்துள்ளது.

இதன்படி, பிரதமராக வரவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்பட உள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன