பேருந்து கட்டணத்தை குறைக்குமாறு பணிப்புரை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேருந்து கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
எரிபொருள் விலை குறைப்புக்கு அமைவாக பேருந்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அதன்படி, திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் நாளை (19) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் நாளை காலை அறிவிக்குமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.