எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2 டீசல் கப்பல்கள் மூலம் கொண்டுவரப்பட்ட எரிபொருள் கையிருப்பு தற்போது இறக்கப்பட்டு வருவதாக கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை அறிவித்துள்ளார்.
அதன்படி நாளை முதல் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு புகையிரதங்கள் மற்றும் எரிபொருள் தாங்கிகள் மூலம் எரிபொருள் கையிருப்பு விநியோகிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மற்றொரு எரிபொருள் கப்பலில் இருந்து கொண்டு வரப்பட்ட டீசல் கையிருப்பை இறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 35,000 மெற்றிக் தொன் பெற்றோல் கொண்ட கப்பலானது தர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அந்த நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் அனேகமாக நாளை கப்பலின் எரிபொருள் இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.