டுபாய் வங்கி வைப்பு குறித்த முக்கியஸ்தர் மகன் யார் – பிரசன்ன

டுபாய் வங்கியில் பெருமளவு பணத்தை முதலீடு செய்துள்ள முக்கியஸ்தரின் மகன் யார் என்பதை அரசாங்கம் வெளியிடவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்கவே குறித்த இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

டுபாயில் இலங்கையின் அதிமுக்கியஸ்தர் ஒருவரின் மகன் பல மில்லியன் டொலர் தொகையை முதலீடு செய்துள்ளதாக அரசாங்கம் அண்மை காலமாக கூறிவருகிறது. எனினும் அவர் யார் என்ற விடயத்தை இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில் அவர் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று பிரசன்ன ரணதுங்க கோரியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வலுவான கட்சியாக உருவாக முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் கடந்த இரண்டு தேர்தல்களிலும் மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெற வைக்க முயற்சித்த போதும் கட்சியின் செயல்களால் அது தோல்வியடைந்ததாகவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.