புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகி நடந்து கொண்டிருக்கிறது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுங்கு விதிகளை சபாநாயகர் அறிவித்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் அனைவரும், ஜனநாயக விழுமியங்களை பேணுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற செயலாளராக நாயகமும் இன்றைய கதாநாயகனாக வும் திகழ்கின்ற தம்மிக தாசநாயக்க, தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி என்ற வகையில், வாக்களிப்பது எவ்வாறு என்பது தொடர்பாக விளக்கம் அளித்து கொண்டிருக்கிறார்.