ரணில் – சஜித் சந்திப்பு!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தனக்கும் இடையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது, சந்திப்பொன்று இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தனக்கும் ஜனாதிபதிக்கும் இடையே நட்பு ரீதியாகவும் நேர்மையாகவும் கருத்துப் பரிமாற்றம் நடந்ததாக அவர் ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காமல் தேசிய ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தின் குழு அமைப்பை பலப்படுத்துவதற்கு யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.