புதிய அமைச்சரவை நாளை பதவியேற்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய அமைச்சரவை நியமனம் நாளை இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவையின் எண்ணிக்கையை 20 -25க்குள் மட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்திருக்கிறார் என்று தெரிய வருகிறது.
சர்வ கட்சிகளையும் உள்ளடக்கிய அமைச்சரவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், நாளை முழுமையான அமைச்சரவை பதவி ஏற்காது என்றே தெரிய வருகிறது.