போலீஸ் அதிகாரியை வெட்டிய சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குருநாகல்,கொணகம என்ற இடத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட பதட்ட நிலையின் போது, போலீஸ் அதிகாரி ஒருவரை,கத்தியால் வெட்டிய சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று முன்தினம் வரிசையில் நின்றவர்கள் கிடையில் குழப்ப நிலை ஏற்பட்டது. இதன் போது, பதட்ட நிலையை தணிக்க முற்பட்ட போலீஸ் அதிகாரி மீது ஒருவர் கத்தியால் வெட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தில், அவர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், 43 வயது உடைய ஒருவரை சந்தேகத்தின் பெயரில் போலீசார் கைது செய்துள்ளனர்.
இவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.