ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க புலம்பெயர் தமிழ் அமைப்புகள் முயற்சி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
ஜனாதிபதி என்ற அந்தஸ்து இழந்த நிலையில், இராஜதந்திர விடுபாட்டு உரிமையையும் அவர் இழந்திருக்கிறார். இந்த நிலையில் நாட்டை விட்டு தப்பிச் சென்று சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்திருக்கும் அவர், இன்னும் ஒரு நாட்டில் தஞ்சமடைய கூடும்.
இந்த நிலையில், பிரிட்டன்,கனடா, ஜெர்மன்,ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா உட்பட பல நாடுகளில் வாழும் தமிழ் புலம்பெயர் அமைப்புகள் கூட்டாக சட்ட நடவடிக்கைகளில் இறங்குவதற்கு தயாராகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
யுத்த குற்றவாளியாக இருக்கின்ற கோட்டாபய ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தில்
நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளில் இந்தப் புலம்பெயர் அமைப்புகள் ஈடுபடுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.