5 கண்ணீர்ப்புகை குண்டுகளுடன் ஒருவர் கைது!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பத்தரமுல்லை – பொல்துவ சந்திக்கு அருகில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்டிருந்தபோது திருடப்பட்ட, 5 கண்ணீர் புகை குண்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் எத்துல்கோட்டே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதுடைய இளைஞர் ஒருவரே நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 13ஆம் திகதி பொல்துவ சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், இந்த கண்ணீர் புகை குண்டுகள் காவல்துறை பொது ஒழுங்கு முகாமைத்துவ பிரிவிற்கு சொந்தமான முச்சக்கர வண்டியில் ஏற்றிச் செல்லப்பட்டபோது போராட்டக்காரர்களால் அவை திருடப்பட்டிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.