இலங்கை டி20 அணி அறிவிப்பு – திரிமன்னே நீக்கம்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட், ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 9ம் திகதியும், 2வது போட்டி 12ம் திகதியும் நடக்கிறது.

இதற்கான இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் மோசமான பார்ம் காரணமாக அணியில் இருந்து ஒதுங்கி இருந்த சகலதுறை வீரர் திசர பேராரா இடம் பெற்றுள்ளார்.

அதே போல் இந்த ஆண்டு யூலை- ஓகஸ்ட் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் இடம்பெறாமல் இருந்த சந்திமால் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்.

அதே போல் துஷ்மந்த சமீரா இடம் பெற்றுள்ளார். ஆனால் திரிமன்னே இந்த அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ளார்.

இலங்கை டி20 அணி விவரம்:-

மலிங்கா, மேத்யூஸ், டில்ஷான், குஷால் பெரேரா, ஷேஹான் ஜெயசூரியா, சிறிவர்த்தன, சமீரா கபுகேடரா, தினேஷ் சந்திமால், கித்துருவான், துஷ்மந்த சமீரா, குலசேகரா, சேனாநாயக்க, ஜெப்ரி வந்தர்சே, பெர்னாண்டோ, திசர பெரேரா.