(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
சிறைச்சாலைகளில் அப்பாவிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் விரைவில்விடுதலை செய்யப்படுவார்கள் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு அரசியல் கைதிகளுக்கும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எம்மிடம் முன்வைக்கும் கோரிக்கைகளை நாம் சாதகமாகப் பரிசீலிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.