வெளிநாட்டு தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

வெளிநாட்டு தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநாட்டு தபால் கட்டணங்கள் இன்று (01) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் கட்டணம் அதிகரிப்பு, டொலரின் பெறுமதி, விமான கட்டணங்கள், புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கட்டணத் திருத்தங்கள் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தற்போதுள்ள கட்டணத்தை விட இருமடங்காகக் கட்டணங்கள் திருத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, வெளிநாட்டு விமான தபால் கட்டணங்கள் மற்றும் வெளிநாட்டு கடல் தபால் கட்டணங்கள் இரண்டும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.