IMF உடன் இம்மாத கடைசியில் ஒப்பந்தம் கைச்சாத்து: ஜனாதிபதி ரணில் நம்பிக்கை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்த மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாம் மட்ட உடன்படிக்கை கைச்சாத்தாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
‘Wall street journal ‘ பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த அவர், இன்னும் 3 பில்லியன் அமெரிக்க டொலர் அடுத்த ஆண்டுக்குள் தேட வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றுக்காக இந்த தொகை தேவைப்படும் என்றும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.