(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்தால் தான் எம்.பி பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாகவும், அப்பதவியை ரஞ்சனுக்கு வழங்க இடமளிப்பதாகவும் ஹரீன் பெர்ண்ன்டோ எம்.பி கூறியிருந்த கருத்து கடந்த நாட்களில் வைரலாகியிருந்த நிலையில், தற்போது ரஞ்சன் விடுதலை தொடர்பில் கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் ரஞ்சன் ராமநாயக்க சிறையில் இருந்து விடுதலையானால் எம்.பி பதவியை இராஜினாமா செய்வீர்களா என ஹரீனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,ரஞ்சனை விடுதலை செய்தால்தான், நான் எம்.பி பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்தேன். கோட்டாபய ராஜபக்சவை நெருக்கடிக்கு தள்ளவே அவ்வாறு தெரிவித்தேன் என தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இக் கருத்தை வெளியிட்டுள்ளார்.