மஹிந்த, பெசிலின் வெளிநாட்டு பயணத் தடை நீடிப்பு

மஹிந்த, பெசிலின் வெளிநாட்டு பயணத் தடை நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 11ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல முடியாது என உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரிய மனு தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையாத நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.