இலங்கையின் எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கும் சீனா!

இலங்கையின் எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கும் சீனா!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சீனாவின் மிகப் பெரிய பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான ‘சினோபெக்’, இலங்கை சந்தையில் பிரவேசிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் இருந்து அதிகமான நிறுவனங்களுக்கு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை இலங்கையில் மேற்கொள்வதற்கும் அனுமதியளிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது.

இதன் அடிப்படையிலேயே சீன நிறுவனம், எரிபொருள் இறக்குமதி, விநியோகம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்வதற்கான இலங்கையின் சந்தையில் பிரவேசிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் 90 வீதம் அரசுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவும் எஞ்சிய 10 வீதமானது லங்கா ஐ.ஓ.சி மூலமாகவும் மேற்கொள்ளப்படுகிறது.