வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வோரின் எண்ணிக்கை 3 இலட்சத்தை தாண்டும்!

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வோரின் எண்ணிக்கை 3 இலட்சத்தை தாண்டும்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2022 ஆம் ஆண்டில் வெளிநாடுகளுக்கான தொழிலாளர் இடம்பெயர்வு 333000 ஐ தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022 ஆகஸ்ட் முதலாம் திகதி வரை 174,584 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர்

இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டிலேயே 300.000 க்கும் அதிகமான தொழிலாளர் இடம்பெயர்வு பதிவாகியுள்ளது

நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் வெளிநாட்டு வேலைகளுக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

இதன் அடிப்படையிலேயே வெளிநாடுகளுக்கான தொழிலாளர் இடம்பெயர்வு இந்த ஆண்டு 330இ000 என்ற புதிய உச்சத்தை எட்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

ஆகஸ்ட் முதலாம் திகதி வரை 174584 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தம்மை பதிவு செய்து வெளிநாட்டு வேலைகளுக்காக சென்றுள்ளனர்.

இருப்பினும்இ உண்மையான வெளிப்புற தொழிலாளர் இடம்பெயர்வு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் 117952 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக நாட்டை விட்டு வெளியேறினர்.

தொழில்களில் பயிற்சி பெறாத மற்றும் வீட்டு உதவி, பணிப்பெண் பிரிவுகளில் பெரும்பாலான இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைக்காக நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

கட்டார், சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமன் ஆகிய இடங்களுக்கே அதிகமானோர் சென்றுள்ளனர்.

இதற்கிடையில் ஜூன் மாதத்தில் 274 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்த பின்னர் ஜூலை மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களிடம் இருந்து பண வரவு மேம்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.