நாட்டில் மேலும் 227 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் மேலும் 227 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டில் நேற்றைய தினம் மேலும் 227 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 667,385 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 9 கொவிட் மரணங்கள் நேற்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் உயிரிழந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.