அருட்தந்தை ஜீவந்த பீரிஸுக்கு பிணை!

அருட்தந்தை ஜீவந்த பீரிஸுக்கு பிணை!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ருட்தந்தை ஜீவந்த பீரிஸுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

இன்றைய தினம், சட்டத்தரணிகளுடன் அவர் நீதிமன்றில் முன்னிலையானபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நீதிமன்றத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால், நீதிமன்ற உத்தரவை மீறி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேகநபரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸை, விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணைப் பிரிவினரால், இன்றைய நீதிமன்ற விசாரணையின்போது கோரப்பட்டது.

குறித்த கோரிக்கையை நிராகரித்த கொழும்பு – கோட்டை நீதவான் திலின கமகே, சந்தேகநபரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவித்து உத்தரவிட்டார்.

அத்துடன், அவரது வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதித்த நீதவான், நாளைய தினம் காவல்துறையில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த மனுமீதான விசாரணை, எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது