ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணம் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட தாமதமானது ஏன்?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு கோட்டை காவல்துறையினரிடம் கையளித்த ஒரு கோடியே எழுபது இலட்சத்துக்கும் அதிக பணத்தொகையை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த தாமதம் ஏற்பட்டமை தொடர்பிலான அறிக்கையை காவல்துறை விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.
காவல்துறை சிறப்பு புலனாய்வு பிரிவின் இயக்குநர் சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.எஸ். விக்ரமசிங்க இந்த சம்பவம் தொடர்பான தொலைபேசி அழைப்பு விவர அறிக்கைகளை பெற்று விசாரணைகளை மேற்கொண்டதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்