சேதம் – திருட்டு விபரங்களை வழங்குமாறு ஜனாதிபதி செயலாளருக்கு அறிவிப்பு!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மாளிகையில், சேதமாக்கப்பட்ட மற்றும் திருடப்பட்ட பொருட்கள் தொடர்பான பட்டியலை வழங்குமாறு, தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்கவினால், ஜனாதிபதியின் செயலாளருக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.
மேல் மாகாண உதவி தொல்லியல் ஆணையாளர் சியாமளா ராஜபக்ஷவின் தலைமையில், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு, ஜனாதிபதி மாளிகையில் உள்ள பொருட்கள் தொடர்பான பட்டியலையத் தாயரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
ஜனாதிபதி மாளிகையின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, அங்குள்ள பொருட்கள் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.
தற்போது வரையில், 75 வீதமான பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.