ரட்டாவின் வங்கிக் கணக்கில் 50 மில்லியன் ரூபாய் : இனம் தெரியாத ஒருவர் வைப்பில் இட்டதாக முறைப்பாடு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனது வங்கிக் கணக்கில் இனம் தெரியாத நபர் ஒருவர் 50 மில்லியன் ரூபா வைப்பில் இட்டுள்ளதாக காலி முக திடல் போராட்ட களத்தின் முக்கிய செயல்பாட்டாளரான ரட்டா என்ற பெயரில் அழைக்கப்படும் பிரபல யூட்யூப்பர் ரவிந்த்து சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
” யார் என்று தெரியவில்லை. எனது வங்கிக் கணக்கில் 50 மில்லியன் ரூபாய்களை வைப்பிலிட்டுள்ளார். இது தொடர்பில், குறிப்பிட்ட வங்கியில் முறைப்பாடு செய்து இருக்கிறேன். ” என ரட்டா அறிவித்துள்ளார்.
“இது போராட்டக்காரர்களையும்,தன்னையும் இலக்கு வைத்து நடத்தப்பட்டு இருக்கின்ற ஒரு விடயமாக தெரிகிறது. நிச்சயம் நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன். ” என அவர் தெரிவித்துள்ளார்.