நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் தொகுதி செயலிழப்பு!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் தொகுதி செயலிழந்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பவியலாளர்கள் கோளாறினை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
2 ஆவது தொகுதியில் திட்டமிட்ட பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அத்துடன் 3 ஆவது தொகுதி தொடர்ந்து இயங்கிவருகிறது.
மின் விநியோகத்தை நிர்வகிக்க மேற்கு முனையம் (West coast) மற்றும் பிற எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.