துமிந்தவின் மனுவை விசாரிப்பதில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரியந்த ஜயவர்தன இன்று விலகியுள்ளார்.

இந்த மனுக்கள் பிரியந்த ஜயவர்தன, யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மனு விசாரணையில் இருந்து விலகுவதாக பிரியந்த ஜயவர்தன அறிவித்திருந்தார். மனு மீதான விசாரணை செப்டம்பர் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.