காலிமுகத்திடல் போராட்டகளத்தில் தவறிப்போன ரி-56 மகசீனுடன் ஒருவர் கைது!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

காலி முகத்துவாரம் போராட்ட களத்திலிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் 30 ரி-56 ரவைகள் அடங்கிய மகசீனுடன் மேசன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை, கொரகான, கல்கனுவ வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ரவைகள் அடங்கிய மகசீனுடன் பொலிஸாரிடம் வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணையின் போது, ​​கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி காலி முகத்துவாரப் பகுதிக்கு சென்று தரையில் விழுந்து கிடந்த மகசினை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

ரவைகள் அடங்கிய மகசீன் காலி முகத்துவாரப் பகுதியில் கடமையாற்றிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவரின் துப்பாக்கியுடையது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேக நபரின் வாக்குமூலம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அவர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.