இன்று முதல் டி-20 சுருளுமா மேற்கிந்திய தீவுகள் அணி

இலங்கை- மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று பல்லேகலயில் நடைபெறுகிறது.

மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்துள்ளது.

இந்நிலையில் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதன் முதல் டி20 போட்டி இன்று பல்லேகலயில் நடக்கிறது.

2வது டி20 போட்டி 12ம் திகதி நடைபெறவிருந்த நிலையில், அந்த போட்டி 11ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதில் இலங்கை அணியை வீழ்த்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

டெரன் சமி தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியில் சகலதுறை வீரர்களான பொல்லார்ட், வெய்ன் பிராவோ இடம்பெற்றிருப்பது அந்த அணிக்கு பலத்தை அதிகரித்துள்ளது.

அதே சமயம் மலிங்கா தலைமையிலான இலங்கை அணியில் சகலதுறை ஆட்டக்காரரான திசர பெரேரா மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். குஷால், டில்ஷான், சிறிவர்த்தன, மேத்யூஸ், சந்திமால் என வலுவான துடுப்பாட்ட வரிசை உள்ளது.

இலங்கை அணி:-

மலிங்கா (அணித்தலைவர்), டில்ஷான், குஷால் பெரேரா, செஹான் ஜெயசூரிய, அஞ்சலோ மேத்யூஸ், மிலிந்த சிறிவர்தன, சாமர கபுகெடரா, தினேஷ் சந்திமால்,கிதுருவான் வித்தானகே, துஷ்மந்த சமீரா, நுவன் குலசேகரா, சேனாநாயக்க, ஜெப்ரி, பெர்னாண்டோ, திசர பெரேரா.

மேற்கிந்திய தீவுகள்:

டேரன் சமி (அணித்தலைவர்), டேரன் பிராவோ, வெய்ன் பிராவோ, ஜோனதன் கார்ட்டர், ஜான்சன் சார்லஸ், பிளட்சர், ஜேசன் ஹோல்டர், சுனில் நரைன், பொல்லார்ட், தினேஷ் ராம்தின், ரவி ராம்பால், ஆன்ட்ரே ரஸல், மார்லன் சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர், தேவேந்திர பிஷூ.