இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.
மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 2வது நாள் ஆட்டத்தின் போது ஸ்டெய்னுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் 2வது இன்னிங்சில் பந்து வீசவில்லை. ஆனால் துடுப்பெடுத்தாடினார்.
இந்நிலையில் பெங்களூரில் எதிர்வரும் 14ம் திகதி நடக்கும் 2வது டெஸ்ட் போட்டியில் ஸ்டெய்ன் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தப் போட்டி நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்தகுதி சோதனை செய்யப்படுகிறது. இதை வைத்தே அவர் இடம்பெறுவாரா.. மாட்டாரா.. என்பது தெரிய வரும்.
மேலும், காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத டுமினி, மோர்னே 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதாக தென் ஆப்பிரிக்க அணி அறிவித்துள்ளது.