தங்க நகைகளை அணிந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

குறிப்பிட்ட வரம்பை மீறி தங்க நகைகளை அணிந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிக்கை ஒன்றின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளால் அரசாங்கத்திற்கு மாதாந்தம் 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அரச வருமானம் இழக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்