முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
கொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
முன்னாள் அமைச்சர் ஜனகவின் விளக்கமறியல் காலத்தை எதிர்வரும் 24ம் திகதி வரையில் நீடிக்க மாத்தளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னதாக இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் ஜனக பண்டார தென்னக்கோன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.