அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள டேய்ட்டன் பகுதியில் இருந்து ஆர்கன் புளுட்டோன் சர்வதேச விமான நிலையம் நோக்கி தனியாருக்கு சொந்தமான ஹாக்கர் H25 ரக ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டுச் சென்றது.
இதில் இரு விமானிகள், ஏழு பயணிகள் என மொத்தம் ஒன்பது பேர் இருந்ததாக தெரிகிறது. குறைவான உயரத்தில் பறந்தபோது, புறப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 2 மைல் தூரத்தில் மின்ஒயர் மீது மோதி, நிலைகுலைந்த ஹெலிகாப்டர் அருகாமையில் இருந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மீது மோதி, வெடித்துச் சிதறியது.
அந்த ஹெலிகாப்டரில் இருந்த ஒன்பது பேரும் இந்த விபத்தில் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் போலீஸ் வாகனங்களும், அவசரச் சிகிச்சை குழுவினரும் சம்பவ இடத்தை நோக்கி விரைந்து கொண்டிருப்பதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.