இலங்கைக்கு வழங்கப்பட்ட சீன அரசின் நிவாரண அரிசியை ஸ்டிக்கி றைஸ் (sticky rice) என்று சொல்வார்கள். அதனை சமைப்பதற்கான வழி முறை என்பது சற்று வித்தியாசமானது என்று இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் தெரிவித்தார்.
மேலும், சீன நாட்டினால் வழங்கப்பட்ட அரிசி தொடர்பில் ஒரு சிலரால் வதந்தி மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, நான் உட்பட சீன மக்கள் உணவுக்கு பயன்படுத்தும் அரிசியையே இங்கு வழங்கினோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.