தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

தனியார் துறை ஊழியர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா சம்பள உயர்வு வழங்குவதற்காக சட்டமூலம் ஒன்று தயாரிக்கப்பட்டு சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ. டி. ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கவும் சட்டமூலமொன்று தயாராகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்க நிறுவனங்களில் ‘மேன் பவர்’ முறையை ரத்துச் செய்து இந்த முறையின் கீழ் நியமிக்கப்பட்ட ஊழியர்களை நிரந்தரமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, முன்னணியுடன் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் என குறிப்பிட்டுள்ளார்.