ரவூப் ஹக்கீம் கட்சியில் இணையுமாறு வேண்டியதாலே மு.கா வில் இணைந்தேன் – ஹிஸ்புல்லாஹ்..!

முன்னாள் அமைச்சரும், ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் செவ்வாய்கிழமை, 10 ஆம் திகதி ஓட்டமாவடி காவத்தமுனையில் வைத்து, தனது தாய்க் கட்சியான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் மீள இணைந்துகொண்டார்.

இந்தநிலையில், ஃபாஸ்ட் நியூஸ் இணையம் ஹிஸ்புல்லாவை தொடர்பு கொண்டு, இதுகுறித்து கேட்ட போது, அவர் குறிப்பிட்டதாவது,

எனது ஆதரவாளர்கள் ஒரு பக்கமும், மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் மறு பக்கமும் முஸ்லிம் காங்கிரஸில் இணையுமாறு என்னிடம் வலியுறுத்தினார்கள்.

இந்நிலையில் தூய நோக்குடன் நான், முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டடேன்.

எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காகவும், கட்சியின் வெற்றிக்காகவும்  செயற்படுவேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவேன். இதன்மூலம் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படும்.

முஸ்லிம் காங்கிரஸிடம் நான் எந்தப் பதவியையும் கோரவில்லை. காலப் போக்கில் கட்சி எனக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கும் என எதிர்பார்க்கிறேன் எனவும், ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.